தமிழ்நாடு

'மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் அடுத்தாண்டு மார்ச்சில் செயல்படும்'

Added : ஜன 16, 2020
Advertisement

இடைப்பாடி: மேட்டூர் அணை உபரிநீர் திட்டம், அடுத்தாண்டு மார்ச்சுக்குள் நிறைவேற்றப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில், தி.மு.க., - பா.ம.க.,விலிருந்து விலகியவர்கள், அ.தி.மு.க.,வில் இணையும் விழா, நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் மணி தலைமை வகித்தார். கோரணம்பட்டி ஊராட்சி தலைவர் ராஜ்குமார், பா.ம.க.,வை சேர்ந்த, ஊராட்சி முன்னாள் தலைவர் வேலன் ஏழுமலை, கொங்கணாபுரம் பேரூராட்சி, தி.மு.க., அவைத்தலைவர் மாதேஷ் உள்பட, 500க்கும் மேற்பட்டோர், முதல்வர் பழனிசாமி முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

தொடர்ந்து, முதல்வர் பேசியதாவது: கொங்கணாபுரம் ஏரிகளுக்கு, மேட்டூர் அணை உபரிநீரை கொண்டு வரும் திட்டம், வரும், 22ல் ஒப்பந்தம் கோரி, அடுத்தாண்டு மார்ச்சுக்குள் இப்பகுதியிலுள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு வரப்படும். இத்தொகுதியில், அனைத்து சாலைகளும் போடப்பட்டுள்ளன. தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்படுகிறது. இடைப்பாடி தொகுதியில், அரசு கல்லூரி, தொழிற்பேட்டை, கல்வியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் போன்றவை, அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப் பட்டுள்ளன. இந்தளவு மக்கள் பணி மேற்கொள்ள, நீங்கள் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுத்ததால் நடந்தது. நான் முதல்வராக பதவி வகிக்க, நீங்களே காரணம். அதற்காக, என்றென்றும் மக்கள் பணிபுரிவேன். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் ராஜேந்திரன், பேரூராட்சி முன்னாள் தலைவர் பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X