சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கைதியுடன் குடித்து கும்மாளம்: 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

Added : ஜன 16, 2020
Advertisement

சேலம்: கைதியுடன் சேர்ந்து, குடித்து கும்மாளமிட்ட இரு போலீசார், ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர், மல்லியக்கரையை சேர்ந்தவர் அன்பழகன், 32. பொதுச்சொத்தை சேதப்படுத்திய இவரை, கடந்த, 4ல், மல்லியக்கரை போலீசார் கைது செய்து, ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர். கடந்த, 13ல், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, மல்லியக்கரை போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு இளங்கோ, 45, இரண்டாம் நிலை காவலர் சுதாகர், 32, ஆகியோர் ஆத்தூர் நீதிமன்றம் சென்றனர். அன்று, மாஜிஸ்திரேட் விடுமுறை என்பதால், சேலம் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு ஆஜர்படுத்திய பின், மீண்டும் ஆத்தூர் சிறைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அயோத்தியாப்பட்டணத்திலுள்ள தாபா ஓட்டலில், கைதியுடன் சேர்ந்து மது அருந்தினர். போதையிலேயே, கிளை சிறைக்கு சென்றனர். இதையறிந்த ஜெயிலர் பவுன்ராஜ், சேலம் சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்படி, சிறை நிர்வாகம் சார்பில், கைதி, இரு போலீசார் போதையிலிருந்ததாக, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இளங்கோ, சுதாகர் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி, சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, ஆத்தூர் டி.எஸ்.பி., ராஜூக்கு, எஸ்.பி., தீபா கானிகேர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X