சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதி 4 பெண்கள் உயிரிழப்பு

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (4)
Advertisement
கார் மோதி 4 பெண்கள் உயிரிழப்பு

வல்லம்: தஞ்சை அடுத்த வல்லத்தில் பல்கலைகழகம் அருகே ஜெபகூடம் உள்ளது. இந்த ஜெபகூடத்துக்கு தினமும் ஏராளமானோர் வந்து ஜெபம் மற்றும் அங்கு நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். நேற்று(ஜன.,15) பொங்கலையொட்டி சிறப்பு ஜெபவழிபாடு நடந்தது. இதில் பங்கேற்க தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பெங்களூர், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.


கூட்டத்துக்குள் புகுந்த கார்

இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த பக்தர்களான செல்வி (வயது 48) அவரது மகள் கீர்த்தி (22), கவிதா(25), கன்னியம்மாள் உள்ளிட்ட 50 பேர் வல்லம்புதூரில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு திரும்பி ஜெபகூடத்துக்கு செல்வதற்காக திருச்சி சர்வீஸ் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் எதிரே திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சத்தியநாராயணன்(42) ஒரு காரில் தந்தை ராமசந்திரன், தாய் ரேவதி ஆகியோருடன் வந்து கொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார் நடந்து வந்து கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் அலறியடித்து கொண்டு பக்தர்கள் ஓடினர். இருப்பினும் பெங்களூரை சேர்ந்த செல்வி, கவிதா, கீர்த்தி, கன்னியம்மாள் ஆகியோர் மீது கார் மோதி ஏறி இறங்கியது. மற்ற பக்தர்கள் மீதும் அடுத்தடுத்து மோதி நின்றது.


4 பெண்கள் பலி


இந்த கோர விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே செல்வி, கவிதா பரிதாபமாக பலியாகினர். கீர்த்தி, ஜோதி, கன்னியம்மாள், திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த வியாபாரி பாலகிருஷ்ணன் மற்றும் காரை ஓட்டி வந்த சத்தியநாராயணா, அவரது பெற்றோர் உள்ளிட்ட 7&க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தி, கன்னியம்மாள் இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


சோகம்


இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதி 4 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
16-ஜன-202010:35:00 IST Report Abuse
சீனி 4 பேர் இறந்தது பரிதாபமாக செய்தி. பொங்கலுக்கு ஜெபம் வைப்பதே, எங்கே பொங்கல் கொண்டாடி இந்துமதத்திற்க்கு போய்விடுவார்களோ என்ற பயத்தில் தான். இந்த விழாவுக்கு ஏற்ப்பாடு செய்தவர்கள் குளித்துவிட்டு வருபவர்களை பாதுகாப்பா ரோட்டை கடக்க ஏற்பாடு பண்ணியிருகலாம். இந்த பெண்கள் பெயரெல்லாம் எதுவும் கிருத்துவ பெயர் கிடையாது, ஆள்வெச்சு ஆளை கடத்துற கட்டாய மதமாற்றம் அடுத்தகட்டதிற்க்கு போய்விட்டது.
Rate this:
Share this comment
truth tofday - india,இந்தியா
18-ஜன-202008:55:11 IST Report Abuse
truth tofdayஇவ்வளவு கேவலமாக நினைப்பதால் தான் பெரும்பாலான ஹிந்துக்கள் ஹிந்து பார்ட்டிக்கு வோட்டை போடுவதில்லை...
Rate this:
Share this comment
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
20-ஜன-202012:02:52 IST Report Abuse
பெரிய ராசு யார்ரா கேவலம் பொங்கலைக்கு என்ன ஜெபம் ...நீ திருந்து ..ஹிந்துக்கள் ஹிந்துக்கு ஒட்டு போடுரான இல்லயான்னுபொறுத்திருந்து பாரு...
Rate this:
Share this comment
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜன-202015:00:10 IST Report Abuse
Yaro Oruvanமத்தமாற்றம் தவறு அதை செய்வது குற்றம்... இறந்தவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.. ஓட்டுநர் அஜாக்கிரதையால் நடந்ததுபோல் இருக்கிறது.. கவனம் தேவை.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X