சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தஞ்சையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு: இருவர் கொலை

Added : ஜன 16, 2020
Advertisement

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், இருவர் கொலை செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியில் உள்ள டாஸ்மார்க் மதுபானக்கடை அருகே நேற்று இரவு மது அருந்திக் கொண்டிருந்த போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில், அரிவாளால் வெட்டப்பட்டதில் வடக்கு வாசல் காளியம்மன் கோயில் காலனியை சேர்ந்த காளிதாஸ் மகன் சக்திவேல் (36) சம்பவ இடத்திலேயே இறந்தார். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடக்கு வாசல் இரட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பெஞ்சமின் மகன் செபஸ்டியானும் (26) இன்று (16ம்தேதி)காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, விளார் சாலை தில்லை நகரைச் சேர்ந்த குமரேசன் மகன் சதீஷ்குமார் (26) சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், வெங்கடேசன், சூர்யா உள்பட 4 பேரை மேற்கு போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X