பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - ஈரோடு

Added : ஜன 16, 2020
Share
Advertisement

சாலையில் மின்விளக்கு அவசியம்: சென்னிமலை, மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு, பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இங்குள்ள படிகளை விட, பக்தர்கள் சாலை வழியைதான் பயன்படுத்துகின்றனர். தற்போது பனிக்காலமாக உள்ளதால், வாகனங்களின் விளக்கு வெளிச்சம் போதுமானதாக இல்லை. எனவே, மின்விளக்குகள் அமைக்க வேண்டியது அவசியம்.

- கே.கே.செல்வராஜ், சென்னிமலை.

வேகத்தடைக்கு வெள்ளை அடிக்கலாமே: ஈரோடு, காந்திஜிரோடு, கச்சேரி வீதி, கருங்கல்பாளையம் மெயின் சாலை மற்றும் நகரின் பல இடங்களில், திட்டப்பணிகள் முடிவடைந்து தார்ச்சாலை மற்றும் புதிய வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு, வெள்ளை பெயின்ட் அடிக்காததால், இரவில் வேகத்தடை இருப்பது தெரியவில்லை. இதனால் பலர் வந்த வேகத்திலேயே, வேகத்தடை மீது ஏறி தடுமாறி செல்கின்றனர். சிலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, வேகத்தடைக்கு வெள்ளை பெயின்ட் தேவை.

- ஏ.பி.கோபாலகிருஷ்ணன், சித்தோடு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X