புதுப்பாளையம் பஜனை கோவிலில் பாரியூர் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதுப்பாளையம் பஜனை கோவிலில் பாரியூர் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம்

Added : ஜன 16, 2020
Share

கோபி: கோபி புதுப்பாளையம் பஜனை கோவிலில், பாரியூர் கொண்டத்து காளியம்மனுக்கு, பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபி ?ஷகம், மஞ்சள் நீர் உற்சவம் நேற்று நடந்தது.
கோபி அருகே, பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் தேர்த்திருவிழா கடந்த, டிச.,26ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்கும் விழா கடந்த, 9ல் கோலாகலமாக நடந்தது. 12ல், மலர் பல்லக்கு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் சூலவேலுடன் வலம் வந்த, விநாயகர் மற்றும் அம்மன், அன்றிரவு கோபி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு விஜயம் செய்தனர். பின் தெப்போற்சவம் முடிந்து, 13ல், கோபி சாரதா மாரியம்மன் கோவிலை அம்மன் அடைந்தார். அங்கு ஆகமவிதிப்படி, அம்மன் மற்றும் சூலவேலுடன் விநாயகருக்கு, மஞ்சள் நீர் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. பின், புதுப்பாளையம் பஜனை கோவிலுக்கு, சூலவேலுடன் விநாயகர், பாரியூர் அம்மன் நேற்று முன்தினம் இரவு விஜயம் செய்தனர். அங்கு, அம்மனுக்கு பல்வேறு அபி ?ஷகங்கள், மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X