பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாதிரி வினா-விடை விற்பனை

Added : ஜன 16, 2020
Share
Advertisement

ஈரோடு: எஸ்.எஸ்.எல்.சி., மாதிரி வினா-விடை (வினா வங்கி) புத்தகம் வாங்கி பயன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு, சில மாதங்களில் தேர்வு நடக்க உள்ளது. ஏற்கனவே, காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மட்டுமின்றி, திருப்புதல் தேர்வுகளும் முடிவடைந்துள்ளன. இவற்றில் மாணவ, மாணவியர் பெற்ற மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு, அதிக மதிப்பெண் பெற வைக்க, தேர்ச்சி பெற செய்ய ஆசிரியர்கள் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், சென்னை தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், எஸ்.எஸ்.எல்.சி., மாதிரி வினா-விடை புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை கொண்ட, வினா-விடை புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கிலம் மீடியத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை, 60 ரூபாய். சென்னை அரசு தேர்வு துறை வளாக ஆலோசகர் அலுவலகம் இப்புத்தகத்தை உருவாக்கி உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., கணிதம், தமிழ் மீடியம் மாதிரி வினா விடை புத்தகம், 80 ரூபாய். ஆங்கில மீடியம், 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஈரோடு, ப.செ.பார்க் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாதிரி வினா-விடை புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி கொள்ளலாம் என, பள்ளி கல்வி துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X