பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : ஜன 16, 2020
Advertisement

புதரான செடி; வாய்க்கால் பாதிப்பு: ஈரோடு அருகே, கருக்கம்பாளையத்துக்கு முன்பாக, நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் கடந்தாண்டு தூர்வாரி தண்ணீர் செல்ல வழி செய்யப்பட்டது. தொடர் மழையால் வாய்க்காலில் அதிகமாக செடிகள், புதர்கள் வளர்ந்து, தண்ணீர் செல்ல முடியாத வகையில் தடைபட்டுள்ளது. தவிர, கரைகளில் வளர்ந்த செடியால், வாய்க்கால் பள்ளம் கூட தெரியாத அளவுக்கு மூடி காணப்படுகிறது. தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில், அவ்விடத்தை தூர்வார வேண்டும்.
பச்சை நீரால் கொசுத்தொல்லை: ஈரோட்டில் இருந்து முத்தூர் சாலையில், இ.பி.பி., நகர் அருகே பிரதான சாலை ஓரத்தில், பள்ளமான இடத்தில் குளம் போல, பச்சை நிறத்தில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அதை ஒட்டி, சாலையில், குப்பையை குவித்து வருகின்றனர். குப்பையை அவ்வப்போது, தண்ணீருக்குள் தள்ளி விடுகின்றனர். இதனால், அப்பகுதியில் ஏராளமான கொசு உற்பத்தியாகி நோய்களை பரப்பி வருகிறது. இந்நீரை தேங்காமல் தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு அலுவலக வளாகத்தில் குப்பை: ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில், தாலுகா அலுவலகம் அருகே மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குப்பையை, மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்துவது கிடையாது. சில சமங்களில் மட்டுமே, குப்பை அகற்றுகின்றனர். 10 நாட்களுக்கும் மேலாக குப்பை அகற்றப்படாததால், சிதறி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. அடிக்கடி குப்பை தேங்குவது அலுவலக வளாகத்தில், தூய்மை இன்மையை காட்டுவதாக உள்ளது.

வேகத்தடையால் விபத்து அபாயம்: நம்பியூர் யூனியன், கரட்டுப்பாளையம் பஞ்சாயத்து, காரப்பாடி பஸ் ஸ்டாப்பில், நிழற்கூடம் அருகே வேகத்தடை உள்ளது. இவ்வழியே, குருமந்தூர் மற்றும் சத்தியமங்கலம் வரை, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. ஆனால், வேகத்தடை மீது போடப்பட்டிருந்த வெள்ளை கோடுகள் அழிந்து, மங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், வேகத்தடை இருப்பதை அறிய முடியாமல், விபத்தில் சிக்குகின்றனர்.

சுகாதார வளாகத்தை பராமரிக்க வேண்டும்: மொடக்குறிச்சி யூனியன், துய்யம்பூந்துறை பஞ்சாயத்துக்குட்பட்ட கிளியம்பட்டியில், 2001ல், ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டு, சில மாதங்கள் இயங்கி வந்தது. பின்னர் தண்ணீரை காரணம் காட்டி, சுகாதார வளாகம் இயங்கவில்லை. தற்போது சுகாதார வளாகம் புதர்மண்டி, பராமரிப்பில்லாமல் உள்ளது. அப்பகுதியினர் திறந்த வெளியை பயன்படுத்தி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X