பொது செய்தி

தமிழ்நாடு

கத்தி போட்டு ஆடி சக்தி அழைப்பு: ஈரோட்டில் பக்தி பரவசம்

Added : ஜன 16, 2020
Advertisement

ஈரோடு: சவுடேஸ்வரியம்மன் கோவில் திருவிழா சக்தி அழைத்தல் நிகழ்ச்சியில், வீரமக்கள் பலர் கத்தி போட்டு ஆடியபடி ஊர்வலமாக சென்றனர்.
ஈரோடு, தில்லை நகரில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரியம்மன் கோவில், 24ம் ஆண்டு பொங்கல் விழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காரைவாய்க்கால் சின்ன மாரியம்மன் கோவில் வளாகத்தில், சக்தி பூஜை செய்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதில், அம்மன் சொரூபத்தை கோவில் நிர்வாகி பயபக்தியுடன் ஊர்வலமாக எடுத்து வந்தார். சக்தியை எதிர் கொண்டு அழைக்கும் வீரமக்கள், தங்களை வருத்திக்கொண்டு சக்தியை கோவிலுக்கு அழைத்து வரும் வகையில், கத்தி போட்டு ஆடியபடி வந்தனர். வாய்க்காலில் இருந்து ஏராளமான பெண்கள் புனித தீர்த்தம், பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். காரைவாய்க்கால், சின்னமாரியம்மன் கோவில், பி.எஸ்., பார்க், தெப்பகுளம் வீதி வழியாக கோவிலில் நிறைவு பெற்றது. அதன் பின், அம்மனுக்கு விசேஷ அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. இரவு ராகு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இன்று காலை மஹா அபி ?ஷகம், மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X