பொது செய்தி

தமிழ்நாடு

மாட்டு பொங்கலுக்கு உருவபொம்மை வாங்கி செல்லும் விவசாயிகள்

Added : ஜன 16, 2020
Advertisement

அந்தியூர்: தமிழர்களின் பண்டிகையான மாட்டு பொங்கல், இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அருகில் உள்ள ஆறு, ஏரிகளுக்கு விவசாயிகள் சென்று கால்நடைகளை குளிப்பாட்டி, மாலை அணிவித்து பூஜை செய்வர். கால்நடைகளுக்கு உடல் ரீதியாக அல்லது வேறு ஏதேனும் குறைபாடுகள் இருந்து, நீண்ட நாட்களாக சரியாகாமல் இருந்தால், கால்நடைகள் நலம் பெற வேண்டி, மாதேஸ்வரன் கோவில், கருப்புசாமி கோவில் கொண்டு செல்வர். அங்கு அவர்கள் வேண்டுதல் வைத்து, கால்நடைகள் குணமடைந்த பின், அதன் உருவத்தை மாட்டு பொங்கலன்று கோவில்களில் வைத்து வழிபடுகின்றனர். இதற்காக அந்தியூர் அருகே புதுப்பாளையம் பகுதியில், மண்பானை தயாரிப்பாளர்கள், மாட்டின் உருவங்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். நேற்று ஒரு அடியில் இருந்து, இரண்டரை அடி வரை தயாரிக்கப்பட்டு, 250 முதல், 1,000 ரூபாய் வரை விவசாயிகள் வாங்கி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X