சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் மாயம்: மனைவி புகார்

Added : ஜன 16, 2020
Advertisement

ஈரோடு: காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தரக்கோரி, ஈரோடு போலீசில் மனைவி புகார் செய்துள்ளார். ஈரோடு, கைகாட்டி வலசு பாரதியார் நகரை சேர்ந்த சதீஷ், 36, பாத்திர வியாபாரி. இவர் மனைவி மகாலட்சுமி, 35. இவர்களுக்கு குழந்தை இல்லை. புதுக்கோட்டை, ஆரணி பகுதிகளில் கடனுக்கு பாத்திரம் விற்று வருகிறார். கடன் தொகையை வசூலிக்க கடந்தாண்டு டிச.,21ல் புதுக்கோட்டை சென்றார். இதுவரை வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. நண்பர்கள், உறவினர் வீடுகளில் தேடியும் பதில் இல்லை. காணாமல் போன, கணவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று மகாலட்சுமி, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X