சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீதிமன்றத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வக்கீல் கைது

Added : ஜன 16, 2020
Advertisement

சென்னிமலை: பெருந்துறையில், நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, நீதிபதி முன், குடி போதையில் ரகளையில் ஈடுபட்ட வக்கீல் கைது செய்யப்பட்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பெருந்துறை பார் கவுன்சிலில் இருந்து நீக்கப்பட்டவர் வக்கீல் ரவி, 46; இவர், பெருந்துறை அருகே செல்லப்ப கவுண்டர்வலசில் வசிக்கிறார். இவர் மீது கொலை வழக்கு, பெண் கடத்தல் வழக்கு என பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த, 2008ல் பெருந்துறையை சேர்ந்த ஒரு பெண்ணை காரில் கடத்திச் சென்ற வழக்கில், நேற்று முன்தினம் ரவி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது வழக்கை நீதிபதி சபீனா விசாரித்து கொண்டிருந்தார். குற்றவாளி கூண்டில் நின்றிருந்த ரவி, போலீஸ் இன்ஸ்பெக்டரை, தான் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றும், தானும் ஒரு வக்கீல் என்றும் தகராறு செய்தார். அவர் குடிபோதையில் இருந்ததால், அங்கிருந்த அனைவரையும் தரக்குறைவாக பேசினார். இதையடுத்து, வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், நீதிமன்ற உதவியாளர் கேசவன் பெருந்துறை போலீசில் புகாரளித்தார். அதன்படி, ரவி கைது செய்யப்பட்டார். சிறிது நேரத்தில் அவர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X