பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - தர்மபுரி

Added : ஜன 16, 2020
Advertisement

எரியாத மின்விளக்கால் மக்கள் அவதி: இலக்கியம்பட்டியிலிருந்து, கலெக்டர் அலுவலகம் வரை, தர்மபுரி - சேலம் சாலையின் நடுவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தர்மபுரி யூனியன் நிர்வாகம் சார்பாக மின் விளக்கு அமைக்கப்பட்டது. இவ்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாமல் காட்சி பொருளாக மட்டும் உள்ளது. இதனால், இவ்வழியாக வந்து செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதை தடுக்க, தர்மபுரி யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.பத்மநாபன், தர்மபுரி.

வடிநீர் கால்வாய் அமைக்கப்படுமா? மொரப்பூர் அடுத்த தொட்டம்பட்டி ரயில்வே சுரங்கப்பாதையில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், சிறிதளவு மழை பெய்தால் கூட, குளம் போல் தண்ணீர் தேங்குகிறது. அந்த வழியாக வரும், இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுவதுடன், கீழே விழுந்து காயமடைகின்றனர். சாலையை சீரமைப்பதுடன், மழை நீர் வெளியேறும் வகையில், வடிநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.

- எம்.ரமேஷ்குமார், எம்.வெளாம்பட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X