பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரி உழவர் சந்தையில் 90 டன் காய்கறிகள் விற்பனை

Added : ஜன 16, 2020
Advertisement

தர்மபுரி: பொங்கல் பண்டிகையையொட்டி, தர்மபுரி உழவர் சந்தையில், இரண்டு நாட்களில் மட்டும், 90 டன் எடைக்கு காய்கறிகள் விற்பனையானது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த காய்கறிகள், பழங்கள், கீரை, தேங்காய் என, பல்வேறு வகையான காய்கறிகளை, தர்மபுரி உழவர் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது பொங்கல் பண்டிகை என்பதால், காய்கறிகளின் வரத்து மற்றும் நுகர்வு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், 48 டன் காய்கறிகளை, 141 விவசாயிகள் தர்மபுரி உழவர் சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். இவற்றை, தர்மபுரி நகர் பகுதியில் உள்ள, 9,691 பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். இதனால், இச்சதையில், 17.40 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையானது. இதேபோல் நேற்று, 42 டன் காய்கறிகளை, 130 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவற்றை, 8,438 பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். இதனால், கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 90 டன் காய்கறிகளை, 32.23 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இவற்றை, 18 ஆயிரத்து, 129 பேர் வாங்கிச்சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X