தமிழ்நாடு

கோலாகலமாக பொங்கலை கொண்டாடிய மக்கள்

Added : ஜன 16, 2020
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், நேற்று பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி மண் பானைகளில் பொங்கல் வைத்து, கோலாகலமாக கொண்டப்பட்டது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டு தோறும், விவசாயத்தை பிரதானமாக கொண்ட தர்மபுரி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். கிராமங்களில், இவ்விழா தொடர்ந்து, தை பொங்கல், மாட்டு பொங்கல், எருது விடும் விழா என, பாரம்பரிய முறைப்படி நடந்து வந்தது. பொங்கல் விழா குறித்து, இளைய சமுதாயத்தினர் மட்டுமின்றி, பாரம்பரியத்தை மறந்த அனைவர் மத்தியிலும் கடந்த சில ஆண்டுகளாக பாரம்பரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை கடந்த சில ஆண்டுகளாக, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நகர் பகுதிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தர்மபுரி சூடாமணி தெரு உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று காலை சூரிய பொங்கல், மண் பானையில் வைத்து கொண்டாடப்பட்டது. பலர், அடுக்கு பானைகளில் பொங்கல் வைத்து, நாட்டு மக்களின் நலமும், விவசாய நிலத்தின் வளமும் பெருக வேண்டும் என, வழிபட்டனர். அதை தொடர்ந்து குழந்தைகள், பெண்கள், ஆண்களுக்கான பாரம்பரிய விளையாட்டான கபடி, சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகள் மட்டுமின்றி, நவீன காலத்து போட்டிகளையும் நடத்தினர். இன்று மாட்டு பொங்கலும், நாளை எருதாட்டமும் நடக்கவுள்ளதால், மாவட்ட மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அ.பள்ளிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், பொதுமக்கள் மற்றும் போலீஸ் சார்பில், நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, இன்ஸ்பெக்டர் ரவி தலைமை வகித்தார். இதில், அ.பள்ளிப்பட்டி பஞ்., தலைவர் தனசேகரன் உட்பட, பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, இருளப்பட்டி காணியம்மன் கோவில் வளாகத்தில், விளையாட்டு போட்டிகள் நடந்தன.


* தர்மபுரி அடுத்த, மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் சின்னமாது தலைமையில், பொங்கல் விழா நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X