பொது செய்தி

தமிழ்நாடு

வரட்டாறு தடுப்பணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டுகோள்

Added : ஜன 16, 2020
Advertisement

அரூர்: வரட்டாறு தடுப்பணையில் இருந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால், தடுப்பணையின் மொத்த கொள்ளளவான, 34.5 அடியில், 31 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்நிலையில், தடுப்பணையில் இருந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: தடுப்பணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. வரட்டாறு தடுப்பணை நீரை நம்பியுள்ள பெரும்பாலான விவசாயிகள் தற்போது, நெல் நடவு செய்துள்ளனர். மேலும், மரவள்ளிக்கிழங்கு நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, தடுப்பணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை திறந்தால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தடுப்பணையில், இருந்து திறந்து விடப்படும் நீரால், வள்ளிமதுரை, தாதரவலசை, கீரைப்பட்டி, கௌாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசனவசதி பெறும். மேலும், நாச்சினாம்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி, மாவேரிப்பட்டி, கம்மாளம்பட்டி, ஈட்டியம்பட்டி, மாம்பாடி, புதூர் ஆகிய, 25 ஏரிகள் நிரம்பும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X