பொது செய்தி

தமிழ்நாடு

4 இடங்களில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் துவக்கம்

Added : ஜன 16, 2020
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், நான்கு இடங்களில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை, அமைச்சர் அன்பழகன் துவக்கி வைத்தார்.
காரிமங்கலத்தில், அம்மா விளையாட்டு திட்ட துவக்க விழா நடந்தது. கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். அமைச்சர் அன்பழகன், விழாவை துவக்கி வைத்து பேசியதாவது: கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியத்தையும், மனவளம், கூட்டு மனப்பான்மையை உருவாக்கும் வகையில், தமிழக அரசு, அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை துவங்கி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், பேளாரஹள்ளி, அரூர், இருளப்பட்டி ஆகிய பகுதிகளில், அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள், பெண்களுக்கு என, தனித்தனியாக, அருகில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் மூலம், பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இக்குழுவில் உள்ளவர்களுக்கு யூனியன், மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, தர்மபுரி மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த விழாவில், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு, ஒரு கோடியே, 31 லட்சத்து, 48 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், கருணை அடிப்படையில், இருவருக்கு பணி நியமன ஆணையும், 20 பயனாளிகளுக்கு, 16 லட்சத்து, 29 ஆயிரம் ரூபாய் பயிர்க்கடனையும், அமைச்சர் அன்பழகன் வழங்கினார். இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் பியூலா ஜென் சுசீலா, எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மத்திய கூட்டுறவு வங்கி சேர்மன் வெற்றிவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X