பொது செய்தி

தமிழ்நாடு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை அமோகம்

Added : ஜன 16, 2020
Advertisement

தர்மபுரி: அதிகாரிகளின் மெத்தனத்தால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை, தர்மபுரி மாவட்டத்தில் அமோகமாக நடந்து வருகிறது.
பிளாஸ்டிக் கவர்கள் மண்ணில் மக்காமல் உள்ளதுடன், சுற்றுச்சூழலையும் பாதித்து வருகிறது. இதையடுத்து, தமிழக அரசு கடந்தாண்டு பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், அதிகாரிகள் சோதனை நடத்தி, விற்பனைக்கு வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், விற்பனை செய்பவர்கள் மீது, வழக்கு பதிவு செய்து வந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாக பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து, அதிகாரிகள் பெயரளவுக்கு மட்டும் ஆய்வு செய்தனர். இதனால், தர்மபுரி உட்பட மாவட்டம் முழுவதும், பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் மறைமுகமாக வைத்து, அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி பார் நடத்துபவர்கள், இவற்றை அதிகளவில் விற்பனை செய்வதுடன், பயன்படுத்திய டம்ளர்களை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால், சுற்றுச்சூழல் தொடர்ந்து பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தடுக்க அதிகாரிகள், அரசு நடைமுறை படுத்திய பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையை மீறுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், இதற்கு துணை செல்லும் அதிகாரிகள் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X