பொங்கலில் எருதாட்டத்துக்கு காளைகளை தேடும் மக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கலில் எருதாட்டத்துக்கு காளைகளை தேடும் மக்கள்

Added : ஜன 16, 2020

தர்மபுரி: எருது விடும் விழாவுக்கு, சிறந்த எருதுகளை கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் தேடி வருவதால், எருதுகளை வளர்ப்பவர்களுக்கு, ஜாக்பாட் அடித்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு, எருது விடும் விழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இதற்கு, கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை அடுத்து, இவ்விழாவில் எருதுகளுக்கு கோவிலில் தீர்த்தம் மட்டும் தெளித்து, பெரும்பாலான எருது வளர்ப்பவர்கள், அவற்றை தங்களது வீட்டுக்கு அழைத்து சென்று விடுகின்றனர். இதனால், வழக்கம் போல் எருது விழாவில் காளைகளை ஊர்வலமாக அழைத்து சென்று, எருதாட்டம் நடத்துவதில் காளைகள் மிக குறைந்தளவில் மட்டும் பங்கேற்பதால், இவ்விழா பெயரளவுக்கு மட்டும் நடந்து வருகிறது. இந்தாண்டு, பருவ மழையால் நெல் உள்ளிட்ட விவசாய பயிர்கள் நன்கு மகசூல் கொடுத்ததை அடுத்து, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், எருது விடும் விழாவை சிறப்பாக நடத்த கிராம மக்கள் மட்டுமின்றி, பாரம்பரிய விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளைஞர்களும் களம் இறங்கி உள்ளனர். இதையடுத்து, நாளை நடக்கும் எருது விடும் விழாவுக்கு, தகுதியான எருதுகளை கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் தேடி வருகின்றனர். இதனால், சிறந்த எருதுகளை வளர்த்து வருபவர்களிடம், அவர்களின் எருது களை கூலி விடுதலுக்கு போதிய பணம் கொடுக்க முன் வந்துள்ளதால், எருதுகள் வளர்ப்பவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X