பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி

Added : ஜன 16, 2020
Advertisement

மலை போல் குப்பை; அகற்ற மனம் வருமா? கிருஷ்ணகிரி வெங்கடாபுரம் பஞ்சாயத்து மேல்சோமார்பேட்டை சர்வீஸ் சாலையோரம் குப்பை கொட்டப்படுகிறது. இதை மாதக்கணக்கில் அள்ளாமல் விடுவதால், மலைபோல் தேங்கி உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசி, அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குப்பை பரவி அருகில் உள்ள சாக்கடை கால்வாயிலும் அடைப்பு ஏற்படுகிறது. எனவே இங்கு கொட்டப்படும் குப்பையை உடனே அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலையில் மின்கம்பம்; விபத்து அபாயம்: கெலமங்கலம் பழைய சார்பதிவாளர் அலுவலக சாலை சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மின்கம்பம் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். லாரி போன்ற கனரக வாகனங்கள் இச்சாலையில் செல்வது சிரமம். இரவில் வரும் வாகன ஓட்டிகளுக்கு மின்கம்பம் சாலையில் இருப்பது தெரிவதில்லை. விபத்து அபாயம் உள்ளதால், சாலையில் உள்ள மின்கம்பத்தை அதிகாரிகள் அகற்றி, சாலையோரம் அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X