பொது செய்தி

தமிழ்நாடு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 160 கன அடியாக சரிவு

Added : ஜன 16, 2020
Advertisement

ஓசூர்: கெலவரப்பள்ளி அணைக்கு, கடந்த ஒரு மாதமாக போதிய நீர்வரத்து இல்லாத நிலையில், நேற்று, நீர்வரத்து மேலும் சரிந்து, 160 கன அடியாக இருந்தது. கர்நாடகா மாநிலம், நந்திஹில்ஸ் மலை மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழைநீரின் அடிப்படையில், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மழை இல்லாததால், அணைக்கு போதிய நீர்வரத்து இல்லை. கடந்த டிச.,22 முதல் நேற்று முன்தினம் வரை தொடர்ந்து, 24 நாட்களுக்கு வினாடிக்கு, 240 கன அடி மட்டுமே அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 240 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு, 160 கன அடியாக குறைந்தது. கடந்த பல மாதங்களில், இல்லாத அளவிற்கு நீர்வரத்து சரிந்ததால், தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்ட, 240 கன அடி நீர் வினாடிக்கு, 160 கன அடியாக குறைக்கப்பட்டது. அதனால், அணை மதகு அடியில், தென்பெண்ணை ஆற்றில் கற்கள் வெளியே தெரிகின்றன. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.66 அடிக்கு நீர்இருப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X