பள்ளிக்கு சுற்றுச்சுவரின்றி மாணவர்கள் அவதி: படிப்பு பாதிப்பதாக பெற்றோர் புகார்

Added : ஜன 16, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: சுற்றுச்சுவர் இல்லாமல் ஏற்படும் இடர்பாடுகளால், மாணவர்களின் படிப்பு பாதிப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, 1 கோடியே, 60 லட்சத்து, 77 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு, 190 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில், பள்ளிக்கூடத்தை சுற்றி, 40க்கும் மேற்பட்ட செடிகளை நட்டு வைத்தனர். ஆனால், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், கால்நடைகள் செடிகளை தின்றதால், சில செடிகள் மட்டுமே உள்ளன. இளைஞர்கள் சிலர் இரவில் பள்ளி வளாகத்துக்குள் சென்று, ஆறு கழிப்பறை கதவுகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதனால், மாணவர்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். மேலும், பைப்கள், தண்ணீர் குழாய்கள், சுவிட்ச் பாக்ஸ், மின்விளக்குகள் ஆகியவற்றையும் உடைத்துள்ளனர். கழிப்பறை மீது வைத்திருந்த இரண்டு தண்ணீர் தொட்டிகளை எடுத்துச்சென்று விட்டனர். இரவில் குடித்துவிட்டு பாட்டில்ளை வீசுவதால், பள்ளிக்கு வரும் மாணவர்கள் பாட்டில்களை அப்புறப்படுத்துவதை முதல்வேலையாக வைத்துள்ளனர். பள்ளியின் பின்புறமுள்ள மயானத்துக்கு, பள்ளி வளாகத்தின் வழியாகவே இறந்தவர்களை எடுத்துச்சென்று எரிக்கின்றனர். இதை ஜன்னல் வழியாக பார்க்கும் மாணவ, மாணவியர் மிகவும் அச்சப்படுகின்றனர். இதுபோன்ற பல்வேறு இடர்பாடுகளால் மாணவர்களின் படிப்பு பாதிப்பதால், போர்க்கால அடிப்படையில் சுற்றுச்சுவர் அமைத்து, மயானத்துக்கு தனிப்பாதை ஏற்படுத்த வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X