பொது செய்தி

தமிழ்நாடு

புழுதியூர் சந்தையில் 1,500 ஆடுகள் விற்பனை

Added : ஜன 16, 2020
Advertisement

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புழுதியூரில், புதன்கிழமையன்று வாரச்சந்தை நடக்கிறது.
பொங்கலை முன்னிட்டு நேற்று காலை, 5:00 மணி முதலே, ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்க சேலம், ராசிபுரம், தர்மபுரி, கடத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

சேலம் வியாபாரி ராமசாமி, 48, கூறியதாவது: பொங்கலை முன்னிட்டு சந்தைக்கு, 1,500க்கும் மேற்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 5,500 முதல், 5,900 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், ஒவ்வொரு ஆடும், 200 முதல், 500 ரூபாய் வரை அதிகரித்து, கூடுதல் விலைக்கு விற்பனையானது. இவ்வாறு அவர் கூறினார். இதே போல், நேற்று சந்தைக்கு கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 90 மாடுகள், கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கலப்பின மாடு ஒன்று, 22 ஆயிரம் முதல், 55 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 3,000 முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. நேற்று, நடந்த சந்தையில், 25 லட்சம் ரூபாய்க்கு, மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X