தமிழ்நாடு

நடப்பாண்டில் 2.54 லட்சம் டன் உணவு உற்பத்தி: பரவலான மழையால் இலக்கை விட கூடுதலாக வாய்ப்பு

Added : ஜன 16, 2020
Advertisement

ஈரோடு: ''ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு, 2.54 லட்சம் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது,'' என, ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பிரேமலதா தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் உணவு தானியங்கள் உற்பத்தி இலக்காக, 3.35 லட்சம் டன் நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை, 2.54 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி, ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பிரேமலதா கூறியதாவது: நடப்பாண்டு பருவமழை பரவலாக பெய்ததுடன், பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணையிலும் முழு கொள்ளளவு எட்டப்பட்டு, பாசனத்துக்கு முழு அளவில் நீர் திறக்கப்பட்டது. தற்போதும், அணைகளில் நீர் மட்டம் நிறைவாக உள்ளது. இதனால் அடுத்த பருவ சாகுபடியும் உறுதியாகி உள்ளது. நடப்பாண்டில், 36 ஆயிரத்து, 900 ?ஹக்டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 28 ஆயிரத்து, 250 ?ஹக்டேரில் சாகுபடியாகி உள்ளது. வரும் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்படும்போது, இலக்கைவிட கூடுதல் சாகுபடியாகும். நெல் உற்பத்திக்கு, 1.45 லட்சம் டன் இலக்கு நிர்ணயித்து, 1.39 லட்சம் டன் உற்பத்தியாகி உள்ளது. சிறு தானியங்கள், 27 ஆயிரத்து, 395 ?ஹக்டரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயித்து, 18,145 ?ஹக்டேரில் சாகுபடியாகி உள்ளது. இவை, 1.85 லட்சம் டன் உற்பத்தி நிர்ணயித்து, 1.11 லட்சம் டன் உற்பத்தியாகி உள்ளது. பயறு வகை பயிர்கள், 7,600 ?ஹக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயித்து, 5,745 ஹெக்டேரில் சாகுபடியாகி உள்ளது. 5,620 டன் உற்பத்தி இலக்கு நிர்ணயித்து, 4,181 டன் உற்பத்தியாகி உள்ளது. இதுபோன்ற உணவு பயிர் தவிர, பருத்தி, 1,200 ?ஹக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயித்து, 642 ?ஹக்டரில் சாகுபடியாகி உள்ளது. கரும்பு, 27 ஆயிரத்து, 000 ?ஹக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயித்து, 10,717 ?ஹக்டேர் சாகுபடியாகி உள்ளது. 31.86 லட்சம் டன் கரும்பு உற்பத்திக்கு இலக்கு நிர்ணயித்து, 13.89 லட்சம் டன் உற்பத்தியாகி உள்ளது. எண்ணெய் வித்துக்களில், நிலக்கடலை, 35,550 ?ஹக்டேர் சாகுபடி இலக்கு நிர்ணயித்து, 17,939 ?ஹக்டேர் சாகுபடியாகி உள்ளது. 63,916 டன் உற்பத்தி இலக்கு நிர்ணயித்த்து, 43,427 டன் உற்பத்தியாகி உள்ளது. நடப்பாண்டு அனைத்து வகையான பயிர்களும் சாகுபடி மற்றும் உற்பத்தி இலக்கை கடந்து, இம்மாவட்டத்தில் சாதனை படைக்கும் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X