சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாளவாடி வனப்பகுதியில் பஸ்சை துரத்திய ஒற்றை யானை

Added : ஜன 16, 2020
Advertisement

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே, வனப்பகுதி சாலையில் நின்றிருந்த ஒற்றை யானை, பஸ்சை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, தாளவாடி மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன. இவைகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது சாலையை கடப்பது வழக்கம். கடந்த சில நாட்களாக ஆசனூர் வழியாக, தாளவாடி செல்லும் வனப்பகுதி சாலையோரங்களில் யானைகள் முகாமிட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணியளவில் தாளவாடி செல்லும் வனப்பகுதி சாலையோரத்தில், ஒற்றை யானை ஒன்று பிளிறியபடி அவ்வழியாக வந்த அரசு பஸ்சை, 100 மீட்டர் தூரம் துரத்தியபடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள், அச்சத்துடன் அமர்ந்திருந்தனர். கடந்த சில நாட்களாக, சாலையோரங்களில் யானைகள் முகாமிட்டு வருவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X