பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழாவில் 300 காளைகள் பங்கேற்பு

Added : ஜன 16, 2020
Share
Advertisement

ஓசூர்: சூளகிரி அருகே, பொங்கல் பண்டிகையையொட்டி, எருது விடும் விழா நடந்தது. இதில், பல்வேறு கிராமங்களில் இருந்து, 300 காளைகள் பங்கேற்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த மருதாண்டப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட வரதாபுரம் கிராமத்தில் உள்ள ஏரியில், பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று காலை, 9:00 மணிக்கு எருது விடும் விழா நடந்தது. இதற்காக, சூளகிரி, தியாகரசனப்பள்ளி, சின்னாறு, செட்டிப்பள்ளி உட்பட, 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. விழா திடலில், காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த தட்டிகளை, இளைஞர்கள் பலர் எடுக்க முயன்றனர். இதில், ஆறுக்கும் மேற்பட்டவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. எருது விடும் விழாவுக்கு, இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. காலை, 11:15 மணிக்கு மேலாகியும் விழா தொடர்ந்து நடந்ததால், சூளகிரி போலீசார் விழாவை தடுத்து நிறுத்தினர். இதனால், அனைவரும் காளைகளுடன் வீடு திரும்பினர். ஆயிரக்கணக்கான மக்கள் விழாவை காண திரண்டதால், போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X