புகார் பெட்டி - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : ஜன 16, 2020

பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா? மல்லசமுத்திரம் ஒன்றியம், மாரம்பாளையம் சமத்துவபுரம், மோர்பாளையம்- வையப்பமலை சாலையில் அமைந்துள்ளது. இங்கு, பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. மாணவர்களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனர். கர்ப்பிணிகள், முதியோர் சிரமப்படுகின்றனர். ஒரு சிலர் மயக்கமடைந்து விடுகின்றனர். பயணிகள் நிழற்கூடம் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

- கே.மாரிசங்கர், மாரம்பாளையம்.

வடிகால் இல்லாததால் அவதி: பள்ளிபாளையம் அருகே, காவேரி அடுத்த குமரப்பன்நகர் செல்லும் சாலையோரத்தில் கழிவுநீர் செல்கிறது. இது பல இடங்களில் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அரசுப்பள்ளி உள்ளதால், மாணவ, மாணவியரும் சிரமப்படுகின்றனர். எனவே, இங்கு போதுமானளவு வடிகால் வசதி அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- என்.கருப்பண்ணன், காவேரி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X