பொது செய்தி

தமிழ்நாடு

7 ரூபாய்க்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

Added : ஜன 16, 2020
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில், 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஏழு ரூபாய்க்கு வழங்கப்படுவது, வரவேற்பை பெற்றுள்ளது. பள்ளிபாளையத்தில், 21 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. மக்களின் தேவைக்கு ஏற்ப, ஆற்றுநீரும், நிலத்தடி தண்ணீரும் தினமும் வழங்கப்படுகிறது. தற்போது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (மினரல் வாட்டர்) மிகக் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ஆவாரங்காடு, சந்தைப்பேட்டை, ஆண்டிக்காடு ஆகிய இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். இங்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 20 லிட்டர், ஏழு ரூபாய், ஒரு லிட்டர், ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. தானியங்கி இயந்திரத்தில் காசு மற்றும் கார்டு போட்டால் குடிநீர் பிடித்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் செயல்படுகிறது. விலை குறைவாகவும், தண்ணீர் சுவையாகவும் உள்ளதால் மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X