பொது செய்தி

தமிழ்நாடு

சவுண்டம்மன் கோவில் சாமுண்டி அழைப்பு வைபவம்

Added : ஜன 16, 2020
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சவுண்டம்மன் கோவில் திருவிழாவையொட்டி, சாமுண்டி அழைப்பு வைபவத்தில், வீரக்குமாரர்கள் கத்தி போட்டவாறு வந்தனர். குமாரபாளையம், சவுண்டம்மன் கோவில் திருவிழா, கடந்த, 10ல் முகூர்த்தக்கால் நடும் விழாவுடன் தொடங்கியது. நேற்று முன்தினம், காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைப்பு வைபவம், நேற்று காலை, சாமுண்டி அழைப்பு வைபவம், மாலை, 4:00 மணிக்கு பெரிய பொங்கல் பூஜை நடந்தது. வீரக்குமாரர்கள் கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்தனர். சவுண்டம்மன் கோவில் திருவிழாவில் வீரக்குமாரர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி நடத்தினாலும், குமாரபாளையத்தில் பெரும்பான்மையானோர் கத்தி போடுவதால், அந்த பிரம்மாண்ட காட்சியை காண பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருவர். இன்று இரவு மகாஜோதி திருவீதி உலா , நாளை, மஞ்சள் நீர் மெரவனை நடைபெறவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X