பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : ஜன 16, 2020
Advertisement

பாதுகாப்பு சுவர் அமைக்க வேண்டும்: குமாரபாளையம், நகராட்சி அலுவலகம் அருகே, பவானியை இணைக்கும் பழைய காவிரி பாலம் உள்ளது. இந்த பாலத்தில் சாலை அதிக பள்ளங்களுடன் போக்குவரத்திற்கு பயனற்றதாக உள்ளது. மேலும், பாலத்தின் மையப்பகுதியில் பக்கவாட்டில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, இடைவெளியில் கான்கிரீட் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. இது பல மாதங்கள் முன்பே பழுதாகி உடைந்து கீழே விழுந்துவிட்டது. நடந்தும், வாகனத்தில் செல்வோருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
சாலையோர பள்ளம்; விபத்து அபாயம்: ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரியில் இருந்து பட்டணம் செல்லும் சாலையில், ஜே.ஜே. காலனி உள்ளது. இந்த சாலையில் லாரி, பஸ் ஆகிய பெரிய ரக வாகனங்கள் ஒரே சமயத்தில் ஒன்று மட்டுமே போக முடியும். சாலை மிகவும் குறுகலாக இருக்கும். இந்நிலையில், காலனி முன்பாக சாலையோரம் குடிநீர் குழாய் கசிவை சரி பார்க்க பள்ளம் தோண்டினர். பல நாட்கள் ஆகியும் அதை மூடவில்லை. இதனால், பஸ், லாரி செல்ல மிகவும் சிரமமாக உள்ளது.

குடிநீர் குழாய்கள் பாதுகாக்கப்படுமா? எலச்சிபாளையம் ஒன்றியம், தொண்டிபட்டி பஞ்., குமரவேலிபாளையத்தில் கடந்த பல நாட்களுக்கு முன், பழுதடைந்த போர்வெல்லை சரிசெய்வதற்காக மின்மோட்டாரில் இருந்த குழாய்கள் அகற்றப்பட்டன. இதுவரை சரி செய்யப்படாமல் குழாய்கள் சாலையோரத்தில் கிடக்கின்றன. அவற்றை மர்மநபர்கள் திருடிச் செல்ல வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் பஞ்சாயத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படும். குழாய்களை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

குப்பை எரிப்பு; சுகாதார சீர்கேடு: குமாரபாளையம், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில், கடைகள் மற்றும் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் குப்பை கொட்டப்படுகிறது. துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள், மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். இந்த இடத்தில் குப்பை கொட்டாதிருக்கவும், தீ வைத்து எரிக்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

பொது மயானத்திற்கு சுற்றுச்சுவர் தேவை: பள்ளிபாளையம் அடுத்த சந்தைப்பேட்டை ஆற்றோரத்தில் மயானம் உள்ளது. சுற்றிலும் பாதுகாப்புச் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. கடந்தாண்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, சுற்றுச்சுவர் சேதமடைந்தது. தற்போது, திறந்தவெளி போல காணப்படுகிறது. மேலும், மயானத்தின் மேல் மட்டம் வரை தண்ணீர் தேங்கியிருப்பதால், பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அருகே உள்ள படித்துறையும் சேதமடைந்து, துணி துவைக்கவும், குளிக்கவும் மக்கள் அவதிப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X