பொது செய்தி

தமிழ்நாடு

கயிறு கடைகள் சாலையோரம் உதயம்

Added : ஜன 16, 2020
Advertisement

ராசிபுரம்: பொங்கல் பண்டிகையையொட்டி, ராசிபுரத்தில் சாலையோரத்தில், 20க்கும் மேற்பட்ட கயிறு கடைகள் வந்துள்ளன. தமிழகத்தில், போகியுடன் பொங்கல்பண்டிகை தொடங்கியது. நேற்று, வாசல் பொங்கலும், இன்று மாட்டு பொங்கலும் நடக்கிறது. தங்கள் வீட்டில் உள்ள கால்நடைகளை குளிக்க வைத்து, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, புதிய கயிறு கட்டுவது விவசாயிகளின் வழக்கம். இதற்காக, கால்நடைகளுக்கு புதிய கயிறுகளை வாங்குவர். ராசிபுரத்தில், சாலையோரத்தில், 20க்கும் மேற்பட்ட தற்காலிக கயிறு கடைகள் வைக்கப்பட்டிருந்தன. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த, சின்னப்பம்பட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் கயிறு உற்பத்தி செய்து, முக்கிய ஊர்களுக்கு சென்று, நேரடியாக விற்பனை செய்கின்றனர். ஜோடி கயிறு, 25லிருந்து, 80 ரூபாய் வரை விற்பனை செய்தனர். அதுமட்டுமின்றி, மாடு கழுத்துக்கு சலங்கை, பிளாஸ்டிக் பூ மாலை என அலங்கார பொருட்களையும் விற்றனர். விவசாயிகள் ஆர்வத்துடன் கயிறுகளை வாங்கி சென்றனர். அதேபோல், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, தற்காலிக கரும்பு கடைகளும் போடப்பட்டிருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X