பொது செய்தி

தமிழ்நாடு

முருக பக்தர்கள் நடைபயணம் துவக்கம்

Added : ஜன 16, 2020
Advertisement

மல்லசமுத்திரம்: முருக பக்தர்கள், பழநிக்கு நடை பயணம் துவக்கினர். முருக பக்தர்கள் மார்கழியில் மாலைஅணிந்து, பல நாட்கள் விரதமிருந்து, தை,1ல் பழநிக்கு பாத யாத்திரை செல்வர். நேற்று, கள்ளக்குறிச்சி, ஆத்தூர், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வையப்பமலை, எலச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திருச்செங்கோடு, ஈரோடு வழியாக பழநிக்கு பாதயாத்திரை சென்றனர். அவர்களுக்கு, ஆங்காங்கே பொதுமக்கள் அன்னதானம் வழங்கினர். ஒரு சிலர் தேனீர் அளித்தனர். காலை, 6:00 மணி முதல், மாலை வரை, ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சென்றனர். பால் காவடி, பழக்காவடி, மயில்காவடி, இளநீர் காவடி ஆகியவற்றை சுமந்து சென்றனர். தை, 5ல் பழநி முருகனை தரிசனம் செய்யப் போவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X