பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு மாரத்தான் போட்டி

Added : ஜன 16, 2020
Advertisement

நாமக்கல்: நாமக்கல்லில், ஆண், பெண் போலீசார் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி நடந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட போலீஸ் துறை சார்பில், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. எஸ்.பி., அருளரசு கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆண், பெண் போலீசார், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆயுதப்படை வளாகத்தில் இருந்து நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேஷன், ஆர்.டி.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலகம் வழியாக மாவட்ட விளையாட்டு மைதானத்தை சென்றடைந்து, பின், அங்கிருந்து மீண்டும் ஆயுதப்படை வளாகத்தை நோக்கி போலீசார் வந்தனர். மூன்று பிரிவுகளில் நடந்த போட்டியில், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X