பொது செய்தி

தமிழ்நாடு

ஊருக்குள் வர மறுக்கும் பஸ்கள்: அரவக்குறிச்சி பயணிகள் தவிப்பு

Added : ஜன 16, 2020
Advertisement

கரூர்: ஊருக்குள் வராமல், பைபாஸ் வழியாக சேலம், மதுரை சென்று விடும் பஸ்கள் அரவக்குறிச்சி உள்ளே வந்த செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அமைந்துள்ளது. இங்கிருந்து வணிகர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தினசரி சேலம், திருச்சி, கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு பல்வேறு அலுவல்கள் மற்றும் தொழில் தொடர்பாக சென்று வருகின்றனர். கரூர் - திண்டுக்கல் மார்க்கத்தில் சென்று வரும் பஸ்கள் மட்டும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, மூன்று கி.மீ., அரவக்குறிச்சி நகருக்குள் வந்து செல்கின்றன. அரவக்குறிச்சி வழியாக செல்ல வேண்டும் என, உத்தரவு இருந்தும் கூட, மற்ற பஸ்கள் நகருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று விடுகின்றன. ஏற்கனவே பெருகி வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப பஸ்கள் போதுமானதாக இல்லாமல் இருக்கின்றன. இதனால் கூட்ட நெரிசலில் பயணிகள் தொங்கிக் கொண்டு செல்லும் ஆபத்தான நிலை உள்ளது. மேலும், சேலம், மதுரை போன்ற நீண்ட தூரம் செல்லும் பயணிகளுக்கு நேரடி பஸ் வசதி இல்லாததால், கரூர் மற்றும் திண்டுக்கல் சென்று பஸ் மாற்றி செல்ல வேண்டும். இதனால் குடும்பத்துடன் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுமைகளுடன் செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இரவு, 10:00 மணிக்கு மேல் ஊர் திரும்பும் வணிகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போதுமான பஸ்கள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். வழித்தடம் இருந்தும் ஊருக்குள் வராமல் பைபாஸ் வழியாக சேலம் மற்றும் மதுரை சென்று விடும் பஸ்கள் அரவக்குறிச்சி உள்ளே வந்து செல்ல அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X