பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா திட்டத்தில் விளையாட்டு பயிற்சி: விழாவில் டி.ஆர்.ஓ., தகவல்

Added : ஜன 16, 2020
Advertisement

கரூர்: ''அம்மா கிராம இளைஞர் விளையாட்டுத் திட்டத்தில், விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும்,'' என, டி.ஆர்.ஓ.., ராஜேந்திரன் தெரிவித்தார்.
கரூர், வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அம்மா கிராம இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் கீழ் விளையாட்டு போட்டி தொடக்க விழா நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், போட்டிகளை தொடக்கி வைத்து பேசியதாவது: தமிழக அரசு சார்பில் இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவித்து வெளிக் கொணரும் வகையில், 12, ஆயிரத்து 524 கிராம பஞ்., 528 பேரூராட்சிகளில், 'அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. இதற்கு, 76.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற இளைஞர்களுக்கு கபடி, வாலிபால், கிரிக்கெட் அல்லது பூப்பந்து ஆகிய விளையாட்டுகளில் பயிற்சியளித்திடும் வகையில், அம்மா கிராமப்புற இளைஞர் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்தந்த கிராமங்கள் அல்லது அருகே உள்ள பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, ஆடுகளங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. கபடி, வாலிபால், கிரிக்கெட் அல்லது பூப்பந்து ஆகிய விளையாட்டுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார். திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் காளியப்பன், தாசில்தார் அமுதா, வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X