பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : ஜன 16, 2020
Advertisement

சாலையோர பள்ளம்; விபத்து வாய்ப்பு: கரூர் மாவட்டம், நொய்யல் அருகில் சாலை ஓரத்தில், குடிநீர் குழாயை சரிசெய்ய பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பணிகள் முடிந்த பின், அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். அந்த பள்ளம் முழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில், இவ்வழியாக செல்பவர்கள், பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி விழுகின்றனர். இங்கு, ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்பட்டு வருவதால், மாணவர்கள் தவறி விழக்கூடிய வாய்ப்புள்ளது.
வாய்க்கால் பாலத்தில் பள்ளம்: கரூர் அருகில், வேட்டமங்கலம் பஞ்., குந்தாணிபாளையத்தில் செல்லும் வாய்க்கால் பாலத்தின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனங்களில் செல்ல முடியாமல், மக்கள் தவிக்கின்றனர். இரவு நேரத்தில், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், பள்ளம் இருப்பது தெரியாமல், தடுமாறி விழும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன் பாலத்தை சரி செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தரமற்ற நிலையில் குப்பை தொட்டிகள்: கரூர், கிராம பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தரமற்ற குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.இவை சில மாதங்களில் சேதமடைகின்றன. இதனால், சாலையோரங்களில் அவை வீணாக கிடக்கின்றன. இதுபோல், சுக்காலியூர் சாலையோரங்களில் ஏராளமான தொட்டிகள் பழுதடைந்து கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன. இப்படி உள்ளாட்சி நிர்வாகத்தின் நிதி வீணாடிக்கப்பட்டு வருகிறது. தரமற்ற தொட்டிகளை வாங்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும்.

தார்ச்சாலையில் குப்பை குவியல்: கரூர் அருகே, செல்லாண்டிபாளையம் சாலையோரத்தில், சில நாட்களாக குப்பை தேங்கியுள்ளது. இதை அகற்றாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், குப்பை போட வசதியாக, பல இடங்களில் தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் சாலையோரத்தில் குப்பை கொட்டுகின்றனர். பல நாட்களாக குப்பை அள்ளப்படாததால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. குப்பையை முறையாக அள்ள வேண்டும்.

தொட்டியை சுற்றிலும் கழிவுநீர் தேக்கம்: கரூர் மாவட்டம், நொய்யல் அருகே, நத்தமேட்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆழ்துளை கிணறு அமைத்து, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பிடிக்கும்போது, சிதறும் தண்ணீர் வடிந்து செல்லும்படி, ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால், கழிவுநீர் குழாய் அருகிலேயே தேங்கி நிற்கிறது. தண்ணீர் பிடிக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், கொசு உற்பத்தியாகி மக்களை இம்சித்து வருகிறது. வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X