பொது செய்தி

தமிழ்நாடு

கார் கண்ணாடிகளில் 'கறுப்பு ஸ்டிக்கர்': கைகட்டி வேடிக்கை பார்க்கும் போலீஸ்

Added : ஜன 16, 2020
Advertisement

கரூர்: கறுப்பு ஸ்டிக்கர்களுடன் வாகனங்கள் உலா வருவதை, கரூர் போக்குவரத்து போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
கார் கண்ணாடிகளுக்கு கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டும் போது முன் மற்றும் பின் பக்கம், பக்கவாட்டு பகுதிகள், 70 சதவீதம் தெளிவாக தெரிய வேண்டும் என, விதிமுறை உள்ளது. விதிமுறைகளை மீறி கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதால், வாகனங்களில் பயணம் செய்பவர் யார் என்பது தெளிவாக தெரிவதில்லை. இதை பயன்படுத்தி சட்டவிரோத செயல்கள் வாகனங்களில் நடக்க வாய்ப்பு அதிகம். 'வாகன கண்ணாடிகளில் உள்ள கறுப்பு நிற பிலிம்களை அகற்ற வேண்டும்' என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பெயரளவில் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். முதல் தடவை பிடிபட்டால், 100 ரூபாய், இரண்டாம் முறை பிடிபட்டால், 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில், கறுப்பு ஸ்டிக்கருடன் வாகனங்கள் அதிகளவில் உலா வருகின்றன. போக்குவரத்து போலீசார், அவ்வப்போது, சோதனை நடத்தி அபராதம் விதிக்கின்றனர். வாகனங்களில் வருபவர்கள் அரசியல் பிரமுகர், அரசு அதிகாரிகள் என்றால் போலீசார் கண்டுகொள்வதில்லை. இதுகுறித்து, போக்குவரத்து போலீசார் கூறியதாவது: அரசுத் துறை அதிகாரிகள், கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களில் பயணிக்கின்றனர். வாகனங்களை நிறுத்தி விசாரித்தால் ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிபாரிசு செய்து போன் செய்கின்றனர். இதனால் நடவடிக்கை எடுக்காமல் கை கட்டி வேடிக்கை பார்த்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X