வேன் டிரைவர் சடலமாக மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேன் டிரைவர் சடலமாக மீட்பு

Added : ஜன 16, 2020

குளித்தலை: குப்புரெட்டிப்பட்டியில், விவசாய கிணற்றில் டிரைவர் பிணமாக மீட்கப்பட்டார். குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்., குப்புரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ், 32; வேன் டிரைவர். மனைவி வளர்மதி. இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், திருப்பூர் பனியன் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால், விரக்தியடைந்த சுரேஷ் மதுவுக்கு அடிமையானார். வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 11 மதியம், 1:30 மணியளவில் வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. 13ல் மதியம் அப்பகுதி விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார். குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X