அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்த ஞானம் முன்பே வராதது ஏன் ?: துரைமுருகனுக்கு கார்த்தி கேள்வி

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (65)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: வேலூர் இடைத்தேர்தலுக்கு முன்பே ஞானோதயம் வராதது ஏன் என திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.latest tamil news
உள்ளாட்சி தேர்தலில் இடம் ஒதுக்காதது தொடர்பாக தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கையால் திமுக - காங்., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. பின்னர் 2 நாட்களிலேயே ஒரே குடும்பத்திற்குள் சிறுசிறு பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் வருவது சகஜம் என மற்றொரு பேட்டி கொடுத்து பல்டி அடித்தார் அழகிரி. இருந்தாலும் கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை உறுதி செய்யும் வகையில், குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக காங்., ஏற்பாடு செய்திருந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் திமுக., புறக்கணித்தது.


latest tamil news


இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட துரைமுருகன் அளித்த பேட்டியில், "திமுக கூட்டணியில் இருந்து காங்., விலகினால் கவலை இல்லை. அவர்கள் விலகுவதால் எங்களுக்கு என்ன நஷ்டம்? காங்., விலகினாலும் கூட அது எங்கள் ஓட்டு வங்கியை பாதிக்காது. அவர்களுக்கு ஓட்டே இல்லை" என்றார்.

துரைமுருகன் பேசிய இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கார்த்தி சிதம்பரம், "வேலூர் லோக்சபா இடைத்தேர்தலுக்கு முன்பே இந்த ஞானோதயம் ஏன் வரவில்லை?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
18-ஜன-202012:08:51 IST Report Abuse
Jaya Ram எங்கே தெம்பு திரணியிருந்தால் திமுகவினை தனித்து போட்டியிடச்சொல்லுங்கள் பார்ப்போம்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
18-ஜன-202004:10:09 IST Report Abuse
meenakshisundaram 'சிவகங்கை சின்னப்பயல் 'என்ற பட்டத்தை வாங்கிக்கொண்டாவது முக வின் தயவால் ஜெய்த்த உங்க நைனா இப்போதாவது 'ஞானோதயம் பெற்றாரா?இல்லே உனக்குத்தான் 'அறிவு 'வந்ததா?ஏதோ சிதம்பரனார் ,பாரதி லெவெலுக்கு இல்லே உயர்த்தி பேசிகொல்லறீங்க ?
Rate this:
Cancel
17-ஜன-202017:17:46 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் 2014 தேர்தலில் திமுக கூட்டணியில் இல்லை என்றவுடன் அப்பாவும் மகனும் தலைதெறிக்க ஓடியது நினைவில் இருக்கிறதா ?
Rate this:
raja - Kanchipuram,இந்தியா
17-ஜன-202019:10:16 IST Report Abuse
rajaஅணைத்து இடங்களையும் திமுக இழந்தது உங்களுக்கு ஞாபகம் இல்லையா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X