தமிழர்கள் பங்கு மகத்தானது: கனடா பிரதமர் பொங்கல் வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழர்கள் பங்கு மகத்தானது: கனடா பிரதமர் பொங்கல் வாழ்த்து

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (19)
pongal, canadapm,JustinTrudeau, canada, pmJustinTrudeau, greetings, tamil, கனடா, பிரதமர், கனடாபிரதமர், ஜஸ்டின் ட்ரூடோ, பொங்கல்வாழ்த்து

இந்த செய்தியை கேட்க

ஒட்டவா: பொங்கல் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவின் வளர்ச்சி, வலிமையில் தமிழர்களின் பங்கு மகத்தானது எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது:




வணக்கம்,கனடா மற்றும் உலகம் முழுவதும் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவரும், தமிழர்களின் அறுவடை நாளான தை பொங்கலை கொண்டாட உள்ளனர். அறுவடை முடிந்து, புத்தாண்டு துவங்குவதை , பொங்கல் பண்டிகை குறிக்கிறது. இந்த கொண்டாட்டத்தின் போது, குடும்பத்தினர், நண்பர்கள் பொங்கலை பகிர்ந்து, புத்தாண்டு துவங்குவதை கொண்டாட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கனடாவில், ஜனவரி தமிழ் பாரம்பரிய மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இது கனடாவில் வசிக்கும் தமிழர்களின் நம்பிக்கையை அங்கீகரிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கனடாவின் வலிமையிலும், செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது. அவர்கள், இன்னும் பல முக்கிய பணியாற்ற உள்ளனர். பொங்கல் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X