விக்டோரியா மெமோரியலுக்கு ராணி லட்சுமிபாய் பெயர் : சுப்ரமணியன்சாமி கோரிக்கை

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (33)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : கோல்கத்தா துறைமுகத்தை தொடர்ந்து விக்டோரியா மெமோரியலின் பெயரையும் மாற்றி, ராணி லட்சுமிபாய் மஹால் என பெயர் சூட்ட வேண்டும் என பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன் சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.





ஜன.,12 அன்று நடைபெற்ற கோல்கத்தா துறைமுகத்தின் 150 வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது பேசிய பிரதமர் மோடி, கோல்கத்தா துறைமுகத்திற்கு, பா.ஜ., முக்கிய தலைவர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜி பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். மோடியின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ள பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,யான சுப்ரமணியன் சாமி, இதே போன்று விக்டோரியா மெமோரியலின் பெயரையும் மாற்றி ராணி லட்சுமி பாய் மஹால் என வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.





இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மோடியின் அறிவிப்பை வரவேற்கிறேன். நமக்கு தெரிந்த வரலாற்றை மறுஆய்வு செய்ய வேண்டும். விக்டோரியா மெமோரியல் என்பதை ராணி ஜான்சி ஸ்மார்க் மஹால் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். 1857 ல் ஜான்சி ராணிக்கு துரோகம் செய்து தான் ராணி விக்டோரியா, இந்தியாவை கைப்பற்றினார். 90 ஆண்டுகள் இந்தியா கொள்ளையடிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murali - Chennai,இந்தியா
16-ஜன-202021:14:04 IST Report Abuse
murali வெற்றிக்கொடி இத்தாலி/இந்தியா அம்மையார் ,சொக்கக் வைக்கும் சோனியா பெயர் வைத்தால் மகிஷ்ச்சி அடைவர்
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
16-ஜன-202020:40:49 IST Report Abuse
Rajagopal அதே போல தமிழகத்தில் எல்லா இடங்களையும் அண்ணா, பெரியார், கலைஞர் என்று பெயர் வைத்திருப்பதை மாற்ற வேண்டும். தமிழுக்கு வாழ்வு தந்த பலர் இந்த அரசியல்வாதிகளின் பெயரை சூட்டி அழிக்கப் பட்டிருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
16-ஜன-202020:29:27 IST Report Abuse
sankaseshan கிறிஸ்டியான்ஸ் பிரிட்டிஷ் அடிமைகள் இஸ்லாமியர்கள் மற்ற மதத்தினரை மதிக்க தெரியாதவர்கள் .இருவருக்கும் நாட்டுப்பற்று கிடையாது.இப்படித்தான் பேசுவார்கள் இந்திய சரித்திரம் திருத்தி எழுதப்பட வேண்டும் இந்த அரசல்தான் இது முடியும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X