பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதத்தை அழிக்க முடியாததற்கு காரணம் : பிபின் ராவத் விளக்கம்

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (10)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : பயங்கரவாதத்தை முற்றிலும் அழிக்க முடியாததற்கான காரணம் குறித்து முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.






டில்லியில் நடைபெற்று வரும் "ரைசியா டையலாக் 2020 " நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிபின் ராவத், பயங்கரவாதத்துடனான போர் முடிவடையவில்லை. சில காரணங்களால் அது தொடர்ந்து வருகிறது. பயங்கரவாதத்தின் வேரை கண்டறிந்து அழிப்பதற்கு போராடி வருகிறோம். நாங்கள் பயங்கரவாதத்திற்கு முடிவுக்கு கொண்டு வரும் நிலையில், இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய போரை அமெரிக்கா துவக்கி உள்ளது. பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு உதவுவோர் யாராக இருந்தாலும் அவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும்.






பயங்கரவாதிகளை தங்களின் பிரதிநிதிகளாக பயன்படுத்தி, அவர்களுக்கு ஆயுதங்கள், நிதி போன்ற உதவிகளை செய்யும் நாடுகள் இருக்கும் வரை பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியாது. அமைதியை கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் தாலிபன்கள் அல்லது மற்ற அமைப்புக்கள் அரசியல் ஆதாயத்திற்காக பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்தப்படுவதால், அவர்கள் முன் வருவதில்லை. பயங்கரவாதிகளுக்கு உதவும் எந்த நாடும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு, தனிமைப்படுத்த வேண்டும். அதுவே பயங்கரவாதத்திற்கு எதிரான முதல் நடவடிக்கையாக இருக்கும். தூதரக ரீதியிலும் அந்த நாடு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய ஐரோப்பிய வெளியுறவுத்துறை மற்றும் தெற்காசியாவிற்கான காமன்வெல்த் அலுவலக இயக்குனர் கேர்த் பேலே, பயங்கரவாத குழுக்கள் பாக்.,ல் இருந்து இயக்கப்படுவது தெளிவாக தெரிந்துள்ளது. பயங்கரவாத அமைப்புக்கள் பாக்., அரசுக்கும் தெற்காசியாவிற்கும் மிகப் பெரிய சவாலாக உள்ளன என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
16-ஜன-202020:09:17 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு கம்ப்யூட்டர் எல்லாம் கொண்டுவந்த காங்கிரஸ் ரபில் வாங்கி வைத்திருந்தால் அண்ணன் எல்லா நாட்டினருடம் போர் செய்து நாட்டை வல்லரசு ஆகி இருப்பார் பவ்வம் இதற்கும் காங்கிரஸ் தான் காரணம்
Rate this:
Share this comment
Cancel
16-ஜன-202017:42:31 IST Report Abuse
தாமரை செல்வன் மோடி வாழ்க பிஜேபி வாழ்க ஹிந்தி வாழ்க போர் போர்
Rate this:
Share this comment
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
16-ஜன-202017:40:53 IST Report Abuse
Rengaraj இந்த மத்திய அரசு குடியுரிமை சட்டம் கொண்டு வந்ததை போல பொது சொத்தை சேதப்படுத்தினால் கட்சிக்காரர்களுக்கு மற்றும் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு ஜாமீன் இல்லாத ஆயுள் தண்டனை மற்றும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி முழுப்பொறுப்பு என்ற பிரிவை புதியதாக சேர்த்து இந்த மாதிரி வன்முறையை அடியோடு நீக்குவதற்கு முயற்சிக்கவேண்டும். வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X