ஜம்மு - காஷ்மீர் பிரச்னையில் பாக்.,கிற்கு மீண்டும் தோல்வி

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (20)
Advertisement
Kashmir,UN, United Nations, ஐநா, ஐக்கியநாடுகள்,காஷ்மீர்,China, Kashmir, UNSC, syedakbaruddin

இந்த செய்தியை கேட்க

நியூயார்க் : ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்பும் பாகிஸ்தானின் முயற்சி, மீண்டும் தோல்வி அடைந்துள்ளது. 'இனியாவது, பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்தே, இந்த விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க, பாகிஸ்தானும், அதன் நட்பு நாடான சீனாவும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.ஆனால், சர்வதேச நாடுகள், இந்த இரு நாடுகள் மேற்கொண்ட முயற்சிக்கு ஆதரவு அளிக்க மறுத்து விட்டன. இந்த விவகாரத்தை, ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்ப, இரண்டு முறை சீனா முயற்சித்தது.ஐ.நா., நிரந்தர உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா ஆகியவை, சீனாவின் முயற்சியை முறியடித்தன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் ரகசிய கூட்டத்தில், 'காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்' என, சீனா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், ஐ.நா.,வின் மற்ற உறுப்பு நாடுகள், 'இது, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இரு தரப்பு பிரச்னை. இதை, சர்வதேச அரங்கில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை' என, நிராகரித்து விட்டன. இதனால், ஐ.நா., கவுன்சிலில், காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப முயன்ற, பாக்., மற்றும் சீனா ஆகிய நாடுகள் தனித்து விடப்பட்டன.




இது குறித்து, ஐ.நா.,வின் இந்திய பிரதிநிதி செய்யது அக்பருதீன் கூறியதாவது: ஒரு உறுப்பு நாடு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப முயன்றது. ஆனால், மற்ற நாடுகளின் ஆதரவுடன், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.பாகிஸ்தான் பிரதிநிதிகள் கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஏற்கப்படவில்லை; அவை நிராகரிக்கப்பட்டதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். இரு நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு, பல்வேறு வழிமுறைகள் உள்ளன என்பதை மற்ற நாடுகள் சுட்டிக் காட்டின.இனியாவது, இந்தியாவுடன் ஆரோக்கியமான, இயல்பான நட்புறவை வைத்துக் கொள்வதற்கு, பாகிஸ்தான் முயற்சிக்க வேண்டும். இந்த விஷயத்தில், இனியாவது பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


சீனாவுக்கு கண்டனம்


ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டதற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியதாவது:காஷ்மீர் விவகாரத்தில், சர்வதேச நாடுகள் அனைத்தும், 'இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையில் தலையிட விரும்பவில்லை' என்ற கருத்தை தெரிவித்துள்ளன. ஆனால், சீனா மட்டும், இந்த விஷயத்தில் தனித்து செயல்படுவது கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில், சர்வதேச நாடுகளின் கருத்தை, சீனாவும் பிரதிபலிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சமத்துவம் - Chennai,இந்தியா
17-ஜன-202000:42:22 IST Report Abuse
சமத்துவம் தமிழ்வேல் தயவு செய்து வேறு நல்ல புனைபெயரைத் தேடவும்...தமிழை அசிங்கப்படுத்த வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
16-ஜன-202018:51:16 IST Report Abuse
karutthu யார் அந்த KD பிரதர்ஸ் ஓபன் ஆக சொல்லமுடியுமா ???
Rate this:
Share this comment
Cancel
jothi.n - chennai,இந்தியா
16-ஜன-202017:21:33 IST Report Abuse
jothi.n This credit gose atchivement Mr.Modiji because he was gone to so many countries for official and explained India is honest county it is transarable.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X