பொது செய்தி

இந்தியா

இந்தியர்களின் வரிபாக்கி, 4 ராணுவ பட்ஜெட்டிற்கு சமம்

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (22)
Advertisement

பெங்களூரு : இந்தியர்களின் வரி பாக்கி, 4 பாதுகாப்புத்துறை பட்ஜெட்டிற்கு சமமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.





2019 ம் ஆண்டின் செப்., மாத நிலவரப்படி, நேரடி மற்றும் மறைமுக வரி பாக்கி ரூ.15 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது 2019-20 ம் ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.3 லட்சம் கோடியை விட அதிகம். கடந்த ஆண்டில் வரி பாக்கி ரூ.14.9 லட்சம் கோடியாக இருந்தது. நேரடி வரி பாக்கி ரூ.12.2 லட்சம் கோடியாகவும், கார்ப்பரேட் வரி பாக்கி ரூ.6.3 லட்சம் கோடியாகவும், வருமான வரி பாக்கி ரூ.5.9 லட்சம் கோடியாகவும், மறைமுக வரி ரூ.2.7 லட்சம் கோடி பாக்கியாக உள்ளது.






மத்திய அரசின் புள்ளிவிபரத்தின் படி கடந்த 5 ஆண்டுகளில் 88 சதவீதம் அல்லது ரூ.13.8 லட்சம் கோடி வரிபாக்கி வசூலிக்கப்பட்டுள்ளது. வரி பாக்கி வைத்திருப்போர் மீது ஐகோர்ட்கள் மற்றம் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. 2017-18 ம் ஆண்டு நிலவரப்படி நேரடி வரிபாக்கி ரூ.11 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இவற்றில் ரூ.10 லட்சம் கோடி வாராக் கடன்களாக இருந்துள்ளன.

வரிபாக்கிகளை வசூலித்து நாட்டின் நிதி பற்றாக்குறையை சரி செய்ய பார்லி., நிலைக்குழு தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 4 பாதுகாப்பு துறை பட்ஜெட்களை தயாரிக்கும் அளவிற்கு உள்ள இந்தியர்களின் வரிபாக்கி, ராஜஸ்தான், ம.பி., மஹாராஷ்டிரா, உ.பி., ஆகிய 4 பெரிய மாநிலங்களின் பட்ஜெட் தொகையை விடவும் அதிகமாக உள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
17-ஜன-202006:37:00 IST Report Abuse
elakkumanan வரியா ஒழுங்கா கட்டுங்கப்பா னு iluthu பிடிச்சா, மோடி கெட்டவரா போய்டுறார்..நீ வரி kattaathe, கட்டவே வேண்டாம், ஏன், கடனை கூட கட்ட வேண்டாம்.....aanaal, கப்பத்தை கட்டுன்னு, போலி பொருளாதாரத்தை , திருட்டு பொருளாதாரத்தை வளர்த்த மாமேதைகள் நல்லவர்களாக போயிடுறாங்க...வரி கட்டாதீங்கப்பா...ஒடனே, கார்பொரேட் கு வரி சலுகையா ? னு ஒரு கூட்டம் கூவுது....இதெல்லாமே இந்த திருட்டு த்ராவிடால்சும், ஹவாலா கூட்டமும்தான்...கார்பொரேட் காரன், எத்தனை லச்சக்கணக்கான பேருக்கு வேலை கொடுக்கிறானு சொல்லமாட்டானுவோ..அதுக்கு, ஒரு காக்கா கடி அவனுக்கு கொடுக்கணும்....இது எல்லா நாடுகளிலும் இருக்கு....அந்த காக்கா கடி ஆயிரம் கோடி யா னு கூவுறானுவோ...அவன் லச்சம் கோடி யாவாரம் pannumbothu, ஒரு சதவீதம் ஆயிரம் கோடி வருதில்ல....நம்ம நூறு ரூவாய்க்கு, பாத்து ரூவா எதிர்பார்க்கும்போது, லச்சம் கோடி போட்டவன்..... நூறு ரூவா வாங்கீட்டு போவானா? சும்மா, இந்த திராவிட திருட்டு பொருளாதார சிவகங்கை அப்பா மகன் கூட்டு பலசரக்கு கடை காரனோட மீடியா தொடர்பால், பரப்பப்படும் திருட்டு வலை....டீம்கா thaan இதுலயும் முன்னோடி......திருட்டு என்பது ஒரு கலை, அதை எல்லோரும் கற்கலாம்...எல்லோரும் செய்யலாம்... அசிங்கமில்லை....சந்தேகமென்றால் என்னை பாருங்கள் னு செய்முறை விளக்கம் kodut
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-ஜன-202005:13:35 IST Report Abuse
Mani . V சரி, சரி விடுங்கப்பு. அதையெல்லாம் தள்ளுபடி செய்தா வரிப்பாக்கி நேராகி விடும். அதானி, அம்பானி, ஸ்ரீஷா பழனிசாமி, பன்னீர் செல்வம், ஸ்டாலின் போன்ற ஏழை குடும்பங்கள் உங்களை வாழ்த்தும்.
Rate this:
Share this comment
Cancel
POORMAN - ERODE,இந்தியா
16-ஜன-202021:44:29 IST Report Abuse
POORMAN கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி பண்ணியதை கணக்கில எடுத்தா எத்தனை பாதுகாப்பு துறைக்கு எத்தனை ஆண்டுகளுக்கு சமமாகும் என்பதனையும் வெளியிட்டா தெரியுமில்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X