பொது செய்தி

இந்தியா

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு: டில்லி அரசு அலட்சியம் - ஜவடேக்கர் தாக்கு

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (18)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டில்லி அரசின் அலட்சியதாலேயே நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது தாமதிக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.







டில்லியில் 2012 ம் ஆண்டு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கு ஜன.,22 ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டில்லி கோர்ட், உத்தரவிட்டது. இதனை எதிர்த்து குற்றவாளிகள் 4 பேரும் சுப்ரீம் கோர்ட், டில்லி ஐகோர்ட்களிலும் பலமுறை மறுசீராய்வு மனு தாக்கல் செய்தும், அந்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. ஜனாதிபதி, உள்துறை அமைச்சகத்திற்கும் அனுப்பப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டன. இருந்தும் குற்றவாளிகள் தரப்பில் தொடர்ந்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கோர்ட் உத்தரவுப்படி ஜன.,22 அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை டில்லி அரசு இன்று (ஜன.,16) நிராகரித்தது.




இந்நிலையில் டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், 2012 டில்லி பாலியல் பலாத்கார குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது தற்போது தாமதமாகி உள்ளது. இதற்கு டில்லி அரசின் அலட்சியம் தான் காரணம். நீதி தாமதிக்கப்படுவதற்கு ஆம்ஆத்மி தான் பொறுப்பு. குற்றவாளிகளின் கருணை மனுக்கள் மீது கடந்த இரண்டரை ஆண்டுகளாக டில்லி அரசு நோட்டீஸ் அனுப்பாமல் இருந்தது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார். இருந்தும் ஜன.,22 தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா அல்லது தாமதிக்கப்படுமா என்பது பற்றி அவர் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜன-202021:08:11 IST Report Abuse
தமிழ்வேல் நான்கையும் தனித்தனி ஆட்களாகப் பார்க்க வேண்டும். நாலையும் சேர்த்துப் பார்ப்பதால், ஒருத்தன் இழுத்தால் எல்லாமே இழு படுது.
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
16-ஜன-202019:48:51 IST Report Abuse
Rajas எதையாவது தெரிந்து தான் பேசுகிறாரா. டெல்லி போலீஸ் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. அரசு வக்கீலின் நியமனத்தில் கவர்னர் வழியாக மத்திய அரசு தலையிட்டு வந்தது. பிப்ரவரி 2019 ல் உச்ச நீதிமன்றம் அரசு வக்கீல் நியமனத்தில் டில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று குட்டிய பிறகே கவர்னர் வழிக்கு வந்தார்.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
16-ஜன-202016:45:01 IST Report Abuse
Pannadai Pandian naalu peru saavaruthula enne sandhosam……..SADISTIC PLEASURE......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X