இந்த செய்தியை கேட்க
புதுச்சேரி : தன் மீதான நில அபகரிப்பு குற்றச்சாட்டை துணைநிலை கவர்னர் கிரண்பேடி நிரூபித்தால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாகவும், அவ்வாறு நிரூபிக்க தவறினால் கிரண்பேடி பதவி விலக தயாரா என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

கடந்த வாரம் முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது மகன் ஆகியோர் நில அபகரிப்பு ஊழலில் ஈடுபட்டதாக காங்., எம்எல்ஏ., தனவேலு புகார் அளித்துள்ளதாக துணைநிலை கவர்னர் கிரண்பேடி தெரிவித்திருந்தார். இதனையடுத்து கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக எம்எல்ஏ., தனவேலுவை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்வதாக காங்., அறிவித்தது.

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, ஆதாரங்கள் இல்லாத என் மீதான குற்றச்சாட்டை துணைநிலை கவர்னர் நிரூபித்தால் நான் எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். அவ்வாறு குற்றச்சாட்டை நிரூபிக்க தவறினால் கிரண்பேடி தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா என சவால் விடுத்தார். மேலும், அவர் வேண்டுமென்றே என்னை இழிவுபடுத்த முயற்சிக்கிறார். துணைநிலை கவர்னராக இருக்க அவர் தகுதியற்றவர் எனவும் காட்டமாக பேசி உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE