நிர்பயா குற்றவாளிகளுக்கு ஜன.,22ல் தூக்கு கிடையாது ?

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (34)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டில்லி கோர்ட் எழுப்பிய கேள்வியால் நிர்பயா குற்றவாளிகளுக்கு ஜன.,22 ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.






டில்லியில் 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜன.,22 ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற டில்லி கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங் அளித்த கருணை மனுவை டில்லி அரசு இன்று காலை நிராகரித்திருந்தது. ஆனால் முகேஷ் சிங்கின் கருணை மனுவை டில்லி அரசு, உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த மனு பரிசீலனையில் உள்ளதால் தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியுமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.





மேலும், குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடைமுறைகள் குறித்து ஜன.,17 க்குள் அறிக்கை தாக்கல் செய்ய திகார் சிறை நிர்வாகத்தையும் டில்லி கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. சிறை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் தொடர்பாக டில்லி அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, நிலுவையில் இருக்கும் நடைமுறைகள் ஆய்வு செய்து, தூக்கு தண்டனை நிறைவேற்றும் தேதியை டில்லி அரசு முடிவு செய்ய வேண்டும் எனவும் கோர்ட் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
16-ஜன-202021:56:54 IST Report Abuse
Vena Suna கண்டிப்பாக இவர்களை காப்பாற்றுவார்கள்...
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
16-ஜன-202021:47:12 IST Report Abuse
dandy இந்தியாவின் ஓடடை சட்டங்களும் ..வளையும் நீதி மன்றங்களும் ...ஹி ஹி ஹி
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜன-202020:54:42 IST Report Abuse
தமிழ்வேல் இன்னும் ஒரு இருவது வருஷம் ஆவுமா ...🤔
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X