இலங்கையில் சீதா கோயில் புனரமைப்பு; மத்திய பிரதேச அரசு ரூ.5 கோடி நிதி

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (19)
Advertisement

இந்த செய்தியை கேட்க

போபால்: இலங்கையில் உள்ள சீதா கோயிலை புதுப்பிக்க மத்திய பிரதேச அரசு ரூ.5 கோடி நிதி வழங்கவுள்ளது. மேலும் இந்த கோயில் சீரமைப்பு பணியை உடனடியாக துவக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது .


மத்திய பிரதேச கலாசார துறை அமைச்சர் சர்மா தலைமையிலான குழுவினர் சமீபத்தில் இலங்கை சென்றனர். இவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில்; சீதை சிறைப்பிடித்து இலங்கையில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்த நவ்ரா எலியா பகுதியில் சீதா கோயில் உள்ளது. இந்த கோயில் மேம்படுத்த மத்திய பிரதேச அரசின் பட்ஜெட்டில் ரூ. 5 கோடி ஒதுக்கியுள்ளோம். எனவே இதற்கான பணிகளை துவக்குங்கள் என்றும் அமைச்சர் குழுவினர் கேட்டு கொண்டனர்.

இது தொடர்பாக ம.பி., மாநில பா.ஜ., தலைவரும், எம்.பி.,யுமான ராகேஷ் சிங் கூறுகையில்: அறிவிப்புகளை வெளியிடுவதில் முதல்வர் கமல்நாத் திறமையானவர் .மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளிக்க மாநில அரசு மறுத்து வருகிறது. அவரது மேலிட தலைவர்களை திருப்தி படுத்த இவ்வாறு செயல்படுகிறார். இதனை மறைக்க தற்போது பெரும்பான்மை மக்களை திருப்தி படுத்த மாநில அரசு சீதா கோயிலுக்கு நிதி வழங்க முடிவு செய்துள்ளது.
உண்மை என்னவெனில், ஜான்கி போன்ற பெயர்களைக் கொண்ட பல சிறுமிகள் பாகிஸ்தானில் துன்புறுத்தப்படுகிறார்கள், அவர்கள் குடியுரிமை பெறுவதை இந்த அரசாங்கம் எதிர்க்கிறது. இந்தியாவில் பல கோயில்கள் உள்ளன, முதலில் அவற்றை பராமரிப்பது குறித்து சிந்திக்கட்டும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜன-202009:40:30 IST Report Abuse
Indian Dubai What happened to CONG? OH MY GOD. DMK & COMMUNIST, KURUMA & DIDI all are crying. Kamalnath JI pls change your stand else DMK will do the protest immediately at SRILANKA against you. Where is PAPPU & SONIA & PRIYANKA & all Muslims & Christians? What a shame to them. so you start acting as a Hindu supporter. We believed you
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
17-ஜன-202004:26:53 IST Report Abuse
Ray நுவரெலியா என்பதே சரி அதிருக்கட்டும் நம் நாட்டில் சீதைக்கு கோயில் எங்காவது உள்ளதா?
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
16-ஜன-202021:37:28 IST Report Abuse
dandy இலங்கையின் நுவர எலிய என்ற இடம் இது 100 % தமிழர்கள் வாழும் மத்திய இலங்கை நகரம் குளிர் பிரதேசம் ..சீதா எலிய என்ற இடம் கூட உண்டு ...பிரபல சிவனொளிபாத மலைக்கு எற நுழையும் இடத்தின் பெயர் நல்ல தண்ணீர் ..
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
17-ஜன-202005:25:42 IST Report Abuse
Pannadai PandianHope they are not TASMAC tamilans, Dandy.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X