பொது செய்தி

இந்தியா

ஐ.நா.,பதவியை தவறாக பயன்படுத்தும் பாக்., : இந்தியா

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (4)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : ஐநா., பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர் என்ற பதவியை பாக்., தவறாக பயன்படுத்துவதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரவீஷ் குமார் குற்றம்சாட்டி உள்ளார்.






காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீனா ஆலோசனை நடத்தியது தொடர்பாக டில்லியில் செய்தியாளர்கள் ரவீஷ் குமார் பேசினார். அப்போது அவர், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர் என்ற பதவியை பாக்., தவறாக பயன்படுத்த பார்க்கிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் பேசி தீர்வு காண வேண்டும் என பெரும்பாலான உறுப்பு நாடுகள் கருத்து தெரிவித்து விட்டன. அப்படி இருக்கையில் முன்அறிவிப்பின்றி பாக்., ஆலோசனை நடத்தி உள்ளது. எந்த ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுக்களை அனைவரையும் ஏற்ற செய்யும் முயற்சியில் பாக்., இறங்கி உள்ளது.





காஷ்மீர் விவகாரத்தில் எதுவாக இருந்தாலும் இருநாடுகளும் ஆலோசித்து தான் முடிவு செய்ய வேண்டும் என்பது பாக்.,க்கு சத்தமாகவும், தெளிவாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனியாவது பாக்.,க்கு விளங்கும் என நம்புவோம். உலக அரங்கில் இது போன்ற செயல்களை பாக்., இனியாவது தவிர்க்க வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நடவடிக்கைக்கு வருகாலங்களில் உரிய பாடம் புகட்டப்படும்.

அமெரிக்க அதிபரின் இந்திய வருகை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் கடந்த சில மாதங்களாக நிலவுகின்றன. பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்த போது, இந்தியா வரும்படி அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக இரு நாடுகளும் பேசி வருகின்றன. உறுதியான தகவல் கிடைத்ததும் அனைவருக்கும் தெரிவிக்கப்படும். ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடத்தப்படும். இதில் 8 உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜன-202014:20:40 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பக்கிகள் தனிநாடு கேட்டதே அதற்காக தான். இங்குள்ள அரைகுறைகள் புரிந்துகொண்டால் சரி
Rate this:
Share this comment
Cancel
Srinivas - Chennai,இந்தியா
16-ஜன-202018:54:08 IST Report Abuse
Srinivas பக்கி எத்தனை முறை அவமானப்பட்டாலும் திருந்தமாட்டான். தீவிரவாதத்தை உலகம் முழுவதும் பரப்புவதில் பக்கி நாடு இருப்பதை உலக நாடுகள் உணர்ந்திருக்கின்றன. அதனால்தான் அவன் என்ன ஊளையிட்டாலும் ஐநாவில் உள்ள நாடுகள் கேட்பது கிடையாது. இந்தியாவைபற்றி பொய் பிரச்சாரம் செய்து தொடர்ந்து அவமானப்படுகிறான். வெட்கம் கெட்ட பிச்சைக்காரன். நட்பு நாடு சவுதியும் அவனை மூக்கறுத்தது..ஆனாலும் ஊளையிடுவதை நிறுத்தவில்லை. சீனாக்காரனும் பாக்கியால் கடுமையாக பாதிக்கப்படுவான்...அப்போது தெரியும் பக்கியின் சுயரூபம்.
Rate this:
Share this comment
Cancel
E Mariappan -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜன-202018:50:30 IST Report Abuse
E Mariappan இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கும் நாடு. எனவே நம் நாடு எப்போதும் பலமானதாகவே இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X