சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

உருகும் இமயத்தில் வளரும் செடிகள்!

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
உருகும் இமயத்தில் வளரும் செடிகள்!

பொதுவாக, கடல் மட்டத்தில்இருந்து, 6,000 மீட்டர் உயரத்திற்கு மேல் செடி, கொடிகள் வளராது என்பது தாவரவியல் உண்மை. ஆனால், அமெரிக்க நாசாவின், 'லேண்ட்சாட்' செயற்கைக் கோள்கள், 1993 முதல், 2018 வரை எடுத்த புவிப் படங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு, ஒரு ஆச்சரியம் தென்பட்டது.

அந்த புகைப்படங்களில் தெரியும் இமயமலை பகுதிகளில், படிப்படியாக பனி உருகி வருவதையும், அந்த இடங்களில் தாவரங்கள் முளைக்கத் துவங்கியிருப்பதையும், பிரிட்டனைச் சேர்ந்த எக்செட்டர் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பருவநிலை மாறுபாட்டால், இமயமலையைப் போர்த்தியிருந்த பனிப் படலம் உருகி, நதியாக ஓடுவது அதிகரித்திருக்கிறது. இதனால், சூரிய ஒளி படும் இடங்களில், 5,000 முதல், 5,500 அடிகளில், அடர் பனிக் குளிரால் தாவரங்கள் வளராமல் இருந்தன. ஆனால், இப்போது அந்த உயரத்தில் வெப்பநிலை மாறி தாவரங்கள் வளர ஏற்றதாகியிருக்கிறது.

இது, பருவநிலை மாற்றத்தின் வருந்தத்தக்க விளைவே தவிர, மகிழ்ச்சியடைய ஒன்றுமில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-ஜன-202009:53:28 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இது, பருவநிலை மாற்றத்தின் வருந்தத்தக்க விளைவே தவிர, மகிழ்ச்சியடைய ஒன்றுமில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்..//
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X